பாராளுமன்ற தேர்தலில் களமிறங்கும் பிரகாஷ்ராஜ்!

Print lankayarl.com in இந்தியா

நடிகர் பிரகாஷ்ராஜ் வருகிற பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடப்போவதாக அறிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறி இருப்பதாவது...

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். புதிய தொடக்கம் தொடங்கிவிட்டது. அதிக பொறுப்புகள் வந்துள்ளன. உங்கள் அனைவரது ஆதரவுடன் வருகிற பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுவேன். தொகுதி பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தனது நெருங்கிய தோழியான கவுரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் பாஜாக அரசை கடுமையாக விமர்சித்து வந்தார்.இதனால் அவரை தமது கட்சிகளில் சேர்த்துக்கொள்ள பல கட்சிகள் முயன்றன.இருந்தும் அவற்றை மறுத்து வந்த நிலையில் இவாறானதொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்

கர்நாடகாவில் உள்ள ஒரு முக்கிய தொகுதியில் அவர் போட்டியிட உள்ளதாக தெரிவிக்க படுகிறது.அத்துடன் காங்கிரஸ் கட்சியின் ஆதரவும் அவருக்கு உள்ளது என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.