புதுக்கோட்டை ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு அரச அதிகாரிகள் தடை

Print lankayarl.com in இந்தியா

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடக்க இருந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு அரசு அதிகாரிகள் அனுமதி மறுத்து இருப்பது அம்மாவட்ட மக்களை சோகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

கந்தர்வகோட்டை அருகே தச்சன்குறிச்சியில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெரும் என்று அறிவிக்கப்பட்டு அணைத்து ஏற்பாடுகளும் நடந்து முடிந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்காததால் ஜல்லிக்கட்டு போட்டி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், இந்த வருடத்திற்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் 3 இடங்களை அறிவித்தது.

அதன்படி தமிழக அரசின் சார்பில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியானது ஜனவரி, 15ம் தேதி அவனியாபுரத்திலும், 16ம் தேதி பாலமேடு-விலும், 17ம் தேதி – அலங்காநல்லூரிலும் நடைபெறும் என்று அறிவிக்க பட்டது குறிப்பிடத்தக்கது