அரிவாளுடன் திருடர்களை துரத்திய தமிழக மங்கை.குவியும் பாராட்டுக்கள்

Print lankayarl.com in இந்தியா

வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையிட முயற்சித்தவர்களை அரிவாளுடன் விரட்டியடித்த பெண்ணிற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

அயல்வீட்டில் வசிப்பவர்கள் சொந்த ஊருக்கு சென்ற நிலையில் 31ஆம் திகதி அதிகாலை 1 மணியளவில் அயல்வீட்டில் திருடர்கள் புகுந்துள்ளனர்.

சி.சி.டி.வி கேமரா மூலம் அயல்வீட்டிலிருந்து இதையறிந்த மலர்விழி அவரது கணவர் மற்றும் ஹரிஸ் என்பவரையும் அழைத்துக்கொண்டு கையில் அரிவாளுடன் ஸ்ரீனிவாச பிரபு வீட்டுக்குச் சென்றுள்ளார்.

வீட்டின் அருகே சென்றதும், திருடர்கள் உள்ளே இருப்பதை புரிந்து கொண்ட அவர்கள், திருடன் திருடன் என கூச்சலிட, உள்ளே இருந்த திருடர்கள் பதறியடித்து அங்கிருந்து காம்பவுண்ட் சுவர் எகிறி குதித்து தப்பிச் சென்றிருக்கிறார்கள்.

இவர்களும் அரிவாளுடன் துரத்த, மின்னல் வேகத்தில் திருடர்கள் தப்பிவிட்டனர். அதன் பின் இந்த தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார்

வீட்டில் சோதனை செய்தபோது, வீட்டின் பீரோவில் இருந்த செயின், மோதிரம், கம்மல், வளையல் உள்ளிட்ட நகைகளை அவர்கள் திருடியிருப்பது தெரியவந்தது. அவை சுமார் 2 லட்சம் மதிப்புள்ள 10 பவுன் நகைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், திருடர்கள் நிறுத்தி வைத்திருந்த டூவிலரை சோதனை செய்தபோது டூவிலரில் ஒரு பையில் நகைகள் இருந்துள்ளதாகத் தெரிகிறது.

இதை போலீஸார் எடுத்துக்கொண்டு ஸ்ரீனிவாச பிரபு கொடுத்த புகாரில் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருடர்களைத் குடும்பத்துடன் தைரியமாக விரட்டிய மலர்விழிக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.