இந்திய மீனவர்கள் நால்வர் நெடுதீவு கடற்பரப்பில் கைது

Print lankayarl.com in தீவகம்

நேற்று அதிகாலை நெடுந்தீவு கடற்பரப்பில் எல்லை தாண்டினார்கள் என்ற குற்றசாட்டில் இந்திய மீனவர்கள் நால்வர் கைதுசெய்ய பட்டுள்ளனர்.

ஜெகதா பட்டினத்தைச் சேர்ந்த நான்கு மீனவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டு காங்கேசன்துறை கடற்படை விசாரணைக்குட்படுத்தப்பட்டனர்.அத்தோடு அவர்களது படகும் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

இதேவேளை மேலதிக விசாரணைகளுக்காக வடமாகாண நீரியல்வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு ஊர்காவற்துறை நீதவானிடம் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்கள்.