சிறுமி ஹரிணி கடத்தல் வழக்கில் புதுத்திருப்பம்

Print lankayarl.com in இந்தியா

தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் காணாமல் போய் சுமார் 3 மாதங்களுக்கும் மேலாக கண்டுபிடிக்கப்படாமல் இருக்கும்
சிறுமி கடத்தல் சம்பவம் தொடர்பில் கடத்திய நபரை அடையாளம் வெளியிட்டுள்ளனர்

3 மாதங்களுக்கு முன்புகாஞ்சிபுரம் மாவட்டம், மானாமதி கிராமத்தைச் சேர்ந்த நாடோடி இன தம்பதியான வெங்கடேசன், காளியம்மா தம்பதிகளின் இரண்டு வயது மகள் ஹரிணி. கடந்த பாசி மணிகள் விற்கப்போன போது சிறுமி ஹரிணி காணாமல்போக, பதறிப்போன அந்தத் தம்பதி, அணைக்கட்டு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளது. அதோடு, ‘ஹரிணி கிடைக்கிற வரை இந்த இடத்தைவிட்டுப் போகமாட்டோம்’ என்று அங்கேயே தங்கி உள்ளனர்.

இதேவேளை காளியம்மாள் ஒன்பது மாத இரண்டாவது குழந்தையை வயிற்றில் சுமந்தபடி போராடடம் நடத்தினார்.கவல் அறிந்த லதா ரஜினிகாந்த் தொலைபேசியில் தொடர்பு கொண்டு காலியம்மாள் தம்பதிக்கு ஆறுதல் கூறியுள்ளார்.

மும்பையில் ஹரிணியின் முகசாயலில் ஒரு குழந்தை இருப்பது தெரியவர காஞ்சிபுரம் காவல்துறையும் அணைக்கட்டு காவல்நிலைய பொலிசாரும் ஹரிணியைக் கடத்திய நபரை அடையாளப்படுத்தி இருக்கிறார்கள்.