ஓடும் ரயிலில் கத்திக்குத்து:லண்டனில் பரபரப்பு

Print lankayarl.com in உலகம்

லண்டனில் கில்ட்போர்ட் பகுதியில் இருந்து வாட்டர்லூ செல்லும் ரயிலில் நேற்று மதியம் 14 வயது மகனின் கண்முன்னே 51 வயது தந்தையை குத்தி கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.


கொலை செய்துவிட்டு, மர்ம நபர் தப்பி ஓடிவிட்டதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.இதன் அடிப்படையில் விரைந்து செயல்பட்ட ரயில்வே பொலிஸார் சர்தி நகரில் ஃபர்ன்ஹம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கத்திக்குத்து நடைபெறுவதற்கு முன்பு, கொலை செய்யப்பட்டவருக்கும், கைது செய்யப்பட்டிருக்கும் பெண்ணுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறியுள்ளார்.
இதற்கிடையில் சம்பவத்தை நேரில் பார்த்த பயணிகள் பலரும், ரயில்வே பொலிசாரின் செயலை பாராட்டி வருகின்றனர்.