100 நாட்களின் பின் மீட்கப்பட்ட ஹரிணி

Print lankayarl.com in இந்தியா

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காணாமல் போன சிறுமி ஹரிணி காவல்துறையின் தொடர் தேடுதலில் 100 நாட்கள் கழித்து மீட்கப்பட்டுள்ளார.

காஞ்சிபுரம் மானாமதியில் வெங்கடேசன்- காளியம்மாள் என்ற நாடோடி இனத் தம்பதியினர் பாசிமணிகள் விற்க சென்றபோது தங்களது குழந்தையை தொலைத்துள்ளனர்.இந்நிலையில் குழந்தை கிடைக்கும் வரை அவ்விடத்தை விட்டு செல்லமாடடோம் என அங்கேயே இருந்தனர்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த்தின் மனைவி லதா, வெங்கடேசனை அழைத்துப் தமது குழந்தைகளுக்கு உதவும் அமைப்பு மூலமும் ஹரிணியை தேடிவருவதாகவும் விரைவில் கிடைத்துவிடுவாள் என தைரிய படுத்தி அனுப்பினார்.

இந்நிலையில் போலீசாரின் தொடர் விசாரணைகளின் இறுதியில் திருப்போரூரில் சிறுமி ஹரிணி இருப்பதாக தகவலறிந்து மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.