பாடசாலை மாணவி பலாத்காரம்:23 வயது வாலிபர் கைது

Print lankayarl.com in இந்தியா

புதுவை ரெட்டியார்பாளையம் பகுதியில் பிளஸ்–2 மாணவியை ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளார்.

குறித்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது.
புதுவை ரெட்டியார்பாளையம் பகுதியை சேர்ந்த செல்வராஜ்.(வயது 23) என்ற இளைஞருக்கும் அதே இடத்தில் பிளஸ்–2 படித்துவரும் மாணவிக்கும் காதல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த இளைஞர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.இது எப்படியோ பெற்றோருக்கு தெரியவர குழந்தைகள் நலக்குழுவிடம் புகார் அளித்துள்ளனர்.

பின்னர் அப் பாடசாலை மாணவியிடம் நடத்தப்பட்ட விசாரணையின் மூலம் அவர் பலாத்காரம் செய்யப்பட்டது தெரிவந்தது.

இதுதொடர்பாக உடனடியாக இது குறித்து ரெட்டியார்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு குறித்த இளைஞரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.