காதலன் வீட்டின் முன்பு மறியல் போராட்டம் செய்த காதலி

Print lankayarl.com in இந்தியா

பூந்தமல்லி எம்.ஜி.ஆர். நகரில் காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் காதலன் வீட்டின் முன்பு காதலி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

பூந்தமல்லி குமணன்சாவடி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த வினோத்குமார் (24) என்ற வாலிபரும் அதே பகுதியில் முருகப்பிள்ளை நகரைச் சேர்ந்த ஆஷா (வயது 24) இருவரும் 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் தன்னை திருமணம் செய்துகொள்ள ஆஷா வற்புறுத்திய பொது குறித்த இளைஞன் மறுத்துவிட்டார்.இதனால் வினோத்குமார் வீட்டின் முன்பு அமர்ந்து ஆஷா தர்ணா போராடடத்தில் ஈடுபட்டார்.

இது குறித்து ஆஷா தெரிவிக்கையில் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தோம்.அவர் என்னை திருமணம் செய்வேன் என்று கூறியதால் இருவரும் ஒருதடவை நெருக்கமா இருந்தோம் இதனால் நான் கர்ப்பமானேன்.

இருந்தும் கர்ப்பத்தை கலைக்க சொல்லி வினோத்குமார் கூறியதால் கலைத்துவிட்டேன் ஆனால் அதன்பின்பு அவர் என்னை திருமணம் செய்ய மறுத்துவிடடார் .அதனாலே இப்போராடத்தில் ஈடுபடுகிறேன் என்கிறார்.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறினர். அதை ஏற்று போராட்டத்தை கைவிட்டு ஆஷா அங்கிருந்து சென்றார். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.