உடல்நலம் பாதிப்பு:அமெரிக்கா சென்ற கேப்டன்

Print lankayarl.com in இந்தியா

நடிகர் விஜயகாந்த் உடல்நல குறைவால் நீண்ட நாட்கள் சிகிச்சையில் உள்ளார். சினிமாவில் இருந்து ஒதுங்கி அரசியலில் மட்டும் கவனம் செலுத்தி வரும் அவர் ஏற்கனவே ஒருமுறை அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்றார்.

அதற்கு பிறகு அவர் சென்னை திரும்பினார். தற்போது அவர் மீண்டும் இரண்டாவது முறையாக சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். இன்று இரவு தான் அவர் சென்னையில் இருந்து மனைவி மற்றும் மகனுடன் கிளம்பி சென்றுள்ளார்.

அது பற்றி கட்சி சார்பில் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளனர் வழக்கம் போல் செக்கப் தான் என கூறுகிறார்கள் ஆனால் தொண்டர்கள் கொஞ்சம் கவலையில் இருக்கிறார்கள்.