இந்திய ராணுவ தினம் இன்று கொண்டாடப்படுகிறது!

Print lankayarl.com in இந்தியா

71-வது இந்திய ராணுவ தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்திய ராணுவத்தின் முதல் இந்திய தலைமைத் தளபதியாக 1949ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி ஃபீல்டு மார்ஷல் கே.எம்.கரியப்பா பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நாள் ஆண்டுதோறும் ராணுவ தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாளில் நாட்டிற்காக கடமையாற்றும்போது உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படும். தலைநகர் டெல்லியில் ராணுவ அணிவகுப்புகள் நடைபெறும். இதற்காக நேற்றுமுன்தினம் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது.

ராணுவத்தில் பணியாற்றுபவர்களும், முன்னாள் ராணுவத்தினருக்கும், அவர்களது குடும்பங்களுக்கும் இந்த நாளில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் குறிப்பிட்டுள்ளார். ராணுவத்தினர் நாட்டின் பெருமிதம் என்றும், நமது சுதந்திரத்தை காப்பவர்கள் என்றும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார். ராணுவத்தினர் விழிப்புடன் இருந்து எப்போதும் கண்காணிப்பு பணியை மேற்கொள்கிறார்கள் என்பதால்தான் மக்கள் பாதுகாப்பாக தூங்குகிறார்கள் எனவும் குடியரசுத் தலைவர் கூறியுள்ளார். இதேபோல, ராணுவத் தளபதி பிபின் ராவத்தும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.