மோடியின் அதிரடி பேச்சு!`

Print lankayarl.com in இந்தியா

நாளை தொடங்க இருக்கிற தமிழ்ப் புத்தாண்டுக்கு என் வாழ்த்துகள். நாளை அம்பேத்கரின் பிறந்த தினம். அவருக்கு எனது மரியாதைகள். இந்த மைதானத்தில் வெப்பமும் உற்சாகமும் அதிகமாக உள்ளன. மைதானத்திலும் சாலையிலும் ஏராளமானோர் திரண்டிருப்பதை ஹெலிகாப்டர் மூலம் பார்த்தேன். அனைவருக்கும் என் நன்றிகள். இந்த மண் கலை, இசை மட்டுமல்லாமல் துணிச்சலுக்கும் பெயர் பெற்றது. எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா இருவரும் ஏழைகளுக்காக வாழ்ந்தார்கள். அவர்களின் நலத்திட்டங்களால் ஏழைகள் வறுமையில் இருந்து வெளிவந்தனர்.

எய்ம்ஸ் மருத்துவமனை மூலமாக இப்பகுதி மக்கள் பயனடைவார்கள். பல ஆண்டுகளாகப் போராடிக்கொண்டிருந்த விவசாயிகள், தங்களது விளைபொருள்களின் ஆதார விலையை ஒன்றரை மடங்கு அதிகரிக்க கோரிக்கை வைத்தார். அதைத் தற்போது அதிகரித்திருக்கிறோம். கங்கையைப்போல வைகையையும் தூய்மைப்படுத்துவோம். சுந்தரமகாலிங்க மலை மற்றும் ஐயப்பன் கோயிலுக்கு எளிமையாக, விரைவாகச் செல்ல வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தித்தர முனைப்போடு இருக்கிறது இந்த அரசு. தோல்வி மனப்பான்மையில் எதிரணியினர் உள்ளனர்'' என்று பேசினார்