தமிழிசைக்கு அறிக்கைவிட்ட அஜித்

Print lankayarl.com in இந்தியா

திருச்சியில் நடைபெற்ற பா.ஜனதா கட்சி நிகழ்ச்சியில் டாக்டர் தமிழிசை பேசும்போது நடிகர் அஜித்குமார் பற்றி பாராட்டி பேசினார், இதை அங்கிருந்த அவரது ரசிகர்கள் வரவேற்றனர்.

இதையடுத்து அஜித் ஒரு அறிக்கை வெளியிட்டார், அதில் தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்றும் எந்தக் கட்சி மேடைகளிலும் தனது பெயரை பயன்படுத்தக்கூடாது என்றும் அறிவித்தார்.

இந் நிலையில் இதுபற்றி டாக்டர் தமிழிசை இன்று விளக்கம் அளித்துள்ளார், அவர் கூறியதாவது,

நான் அஜித்தை கட்சிக்கு வரும்படி அழைக்கவில்லை, எங்கள் கட்சியில் சேருவார் என்றும் சொல்லவில்லை.

நான் ஒரு குழந்தைகள் நல மருத்துவர் என்ற முறையில் ஒரு குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு மனிதாபிமானத்துடன் அவர் செய்த உதவியை பாராட்டினேன்.

நல்ல உள்ளம் கொண்ட நடிகர் என்று குறிப்பிட்டேன், அழைக்கவில்லை, இது தவறா? அவர்கள் நடித்து கொண்டிருந்தால் நடித்து கொண்டிருக்கட்டும் என கூறியுள்ளார்.