மறு அறிவித்தல் வரை மூடும் ஷங்ரி லா ஹோட்டல்

Print lankayarl.com in இலங்கைநேற்றய தினம் தாக்குதல்களுக்குள்ளான கொழும்பிலுள்ள ஷங்ரி லா ஹோட்டலை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு அதன் முகாமைத்துவம் முடிவு செய்துள்ளது.

இது தொடர்பில் தங்களது ஹோட்டலில் இடம்பெற்ற தாக்குதலில் பல உயிர்கள் பலியானதுக்கு தாம் வருந்துவதாகவும் அக்கணம் அதில் தமது ஊழியர்கள் மூவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்,

எனினும் பாதிக்கப்பட்டோருக்கு தாம் உதவி வருவதாகவும், தமது ஹோட்டலில் தங்கியுள்ளவர்களுக்கு மாற்று தங்குமிட வசதிகள், போக்குவரத்து மற்றும் விமான சேவை ஏற்பாடுகள் உள்ளிட்ட விடயங்களை மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர் .

எனவே இது தொடர்பிலான உதவிக்கு +603 2025 4619 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு அழைக்குமாறும் ஹோட்டல் முகாமைத்துவம் அறிவித்துள்ளது ,