நயன்தாரா நடிக்கும் ‘ஐரா’ ஃபர்ஸ்ட் லுக் வெளிவந்தது

Print lankayarl.com in தீவகம்

‘இமைக்கா நொடிகள், கோலமாவு கோகிலா’ வெற்றிக்கு பிறகு நயன்தாரா, அஜித்தின் ‘விஸ்வாசம்’, சக்ரி டோலட்டியின் ‘கொலையுதிர் காலம்’, நிவின் பாலியின் ‘லவ் ஆக்ஷன் டிராமா’, சிரஞ்சீவியின் ‘சைரா நரசிம்ஹா ரெட்டி’, மகேஷ் வெட்டியாரின் ‘கோட்டயம் குர்பானா’, அறிவழகன் படம், சர்ஜுன் படம், சிவகார்த்திகேயன் படம் என வரிசையில் காத்திருக்கிறது பட ஷூட்டிங்குகள்.

இதில் ‘லக்ஷ்மி, மா’ போன்ற குறும்படங்களின் மூலம் புகழ் பெற்ற சர்ஜுன்.கே.எம் நயன்தாராவை வைத்து இயக்கும் படம் நயன்தாராவின் 63வது படம். ஹாரர் பின்னனியில் உருவாகும் இந்தப் படத்தை ‘KJR ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது.

இந்தப் படத்தில் நயன்தாரா இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘8 தோட்டாக்கள்’ புகழ் கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்து வருகிறார்.

தற்போது இப்படத்திற்கு ‘ஐரா’ என பெயரிடப்பட்டு, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. இதனை ‘KJR’ நிறுவனமே தங்களது ட்விட்டர் பக்கத்தில் உறுதிபடுத்தியுள்ளது.