சிக்கலில் சிக்க்கிய சர்கார்:தீபாவளிக்கு வருமா என்பதை சந்தேகம்

Print lankayarl.com in சினிமா

விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படத்தின் கதை திருட்டு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள திரைப்படம் சர்கார்.

அரசியலை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது.

இருதினங்களுக்கு முன்பு வெளியான சர்கார் படத்தின் டீசஸ் சூப்பர் டூப்பர் ஹிட்டானதால் விஜய் ரசிகர்கள் குஷியில் இருக்கிறார்கள்.

ஆனால் இந்த படத்திற்கு வேறொரு ரூபத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

வருண் ராஜேந்திரன் என்பவர் தான் எழுதிய ‘செங்கோல்’ கதையை திருடி தான் சர்கார் படம் எடுத்துள்ளதாக எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்தார்.

ஆனால் இதனை ஏ.ஆர்.முருகதாஸ் திட்டவட்டமாக மறுத்தார்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து எழுத்தாளர் சங்கத் தலைவர் இயக்குனர் கே.பாக்யராஜ் தலைமையிலானக் குழு விரிவான விசாரணை நடத்தியது.

இதில் செங்கோல் கதையின் 95 சதவீதம் காட்சிகள் சர்கார் படத்தில் இடம்பெற்றுள்ளது உறுதியாகியுள்ளமை தெரியவந்துள்ளது.

2007ம் ஆண்டு வருண் ராஜேந்திரன் இந்த கதையை எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இதனால் அந்த கதை அவருக்கு தான் உரிமையானது என எழுத்தாளர் சங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சர்கார் படம் வெளிவர இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் கதை திருடப்பட்டது உறுதியாகியுள்ளதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கத்தி திரைப்படத்திற்கும் அதேபோன்ற குற்றச்சாட்டு ஏ.ஆர்.முருகதாஸ் மீது கூறப்பட்டது, ஆனால் அதை அவர் நீதிமன்றத்தில் பொய் என நிரூபித்தார்.

இந்நிலையில் சர்கார் படத்திற்கும் இதே போன்ற பிரச்சினை ஏற்பட்டுள்ளதால் இந்த விவகாரமும் நீதிமன்றத்திற்கு செல்லும் வாய்ப்புள்ளதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிகின்றன.

ஆனால் ரிலீஸ் திகதி நெருங்கி வருவதால் வேறு வழிகள் என்ன என்பது குறித்தும் படக்குழு ஆலோசித்து வருகிறது.