டெல்டா மாவட்டங்களில் கனமழை....

Print lankayarl.com in இந்தியா

காற்று மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!

அடுத்த மூன்று நாட்களில் தமிழகம், புதுவையில் மழையின் அளவு படிப்படியாகக் குறையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், 7 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறினார். ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும், மூன்று நாட்களில் மழை படிப்படியாகக் குறையும் என்றும் தெரிவித்தார்.

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை மைய இயக்குநர் புவியரசன் கூறுகையில்., காற்று மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராமேஸ்வரத்தில் 23 செ.மீ. மழை பொழிந்துள்ளது எனவும் நாகை மாவட்டத்தில் பல இடங்களில், பரவலாக காலை முதல் மழை பெய்தது. தரங்கம்பாடி, சீர்காழி,பூம்புகார், வேளாங்கண்ணி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது. கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.

இதை தொடர்ந்து, தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அடுத்த 5 நாட்களுக்கு மழை இருக்காது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!