பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து: குழந்தைகள் உட்பட 15 பேர் பலி....!

Print lankayarl.com in இந்தியா

கர்நாடகா மாண்டியா மாவட்டத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 15 பேர் பலி, 20 பேர் காயம்...

கர்நாடகா: மண்டியா மாவட்டம் அருகே சுமார் 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குலானத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 15 பேர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலை கர்நாடகா மாநிலம் மண்டியா மாவட்டம் பகுதியில் உள்ள கால்வாய் மீது உள்ள பாலத்தில் பேருந்து சென்று கொண்டிருந்த பொது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சென்றுள்ளது. இந்நிலையில், பேருந்தை ஓட்டுனர் நிறுத்த முயற்சித்தும் அது முடியவில்லை. இதை தொடர்ந்து பாலத்திலிருந்து பேருந்து ஆற்றுக்குள் நிலைதடுமாறி விழுந்தது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் சம்பவ இடத்திற்கு சென்று மீட்ப்புபனியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட சுமார் 15 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளனர். மேலும், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதித்துள்ளனர். இதில், மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகாமாகும் என அஞ்சப்படுகிறது.