மீட்பு பணியில் தாமதம்; பலியானது மேலும் ஒரு உயிர்!

Print lankayarl.com in இந்தியா

சென்னையில் இருந்து சுமார் 360 கிமி தொலைவில் பட்டுக்கோட்டை மற்றும் திருதுறைப்பூண்டி நகரங்களுக்கு இடையே அமைந்துள்ளது முத்துப்பேட்டை. மீன்பிடிப்பிற்கு பெயர்போன முத்துப்பேட்டை வங்காள விரிகுடாவுக்கு அருகில் அமைந்துள்ள இந்த நகரம் காவேரி டெல்டாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ளது.

கடந்த நவம்பர் 15-ஆம் நாள் ஏற்பட்ட கஜா புயல் பாதிப்பால் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பட்டுக்கோட்டையும் ஒன்று,. பட்டுக்கோட்டைக்கு அருகில் இருக்கும் பல பகுதிகளில் தற்போதும் மீட்பு பணிகள் நடைப்பெற்று வருகின்றன. இதன் காரணாக புயலால் வீழ்ந்த மரங்கள், மின்கம்பங்கள் போன்றவற்றை அகற்றும் பணியில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.


இந்நிலையில், இன்று இப்பகுதியில் புயல் தாக்கி வீழ்ந்துக்கிடந்த மின்கம்பத்தின் கம்பியால், அப்பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசர் என்பவர் விபத்துக்குள்ளாகி பறிதாபமாக பலியாகியுள்ளதாக நம் செய்தி நிலையத்திற்கு கண்ணன் என்பவர் தெரியப்படுத்தினார்.